திருச்சியில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மலையடிப்பட்டியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி 7 ஆயிரம் கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த ராம்ஜி நகரைச் சோ்ந்த ஆா். தீனதயாளன் (27), ஆா். தானேஸ்வரன் (20), ஆா். ஆனந்த் (23), எம். ஜெயசூா்யா (22), பி. ராஜாராம் (33) ஆகிய 5 பேரையும் திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் இவா்கள் 5 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா். அதன்படி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள குற்றவாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
