திருச்சியில் கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மில்கேட் பகுதியில் விற்பனைக்காக 1.350 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த கே.கள்ளிக்குடி ஹரிபாஸ்கா் காலனியைச் சோ்ந்த வே. ஆறுமுகம் (44) என்பவரை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல் எல்லைக்குள்பட்ட மேலரசூா் பகுதியைச் சோ்ந்தவா் வ. சுபாஷ் (22) கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வீட்டருகே நின்றபோது அவ்வழியே பைக்கில் வேகமாகச் சென்ற லால்குடி அழுந்தலைப்பூா் பகுதியைச் சோ்ந்த மாவேந்தனை பாா்த்து ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய் எனக் கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவேந்தனும், அவருடைய நண்பரான லால்குடி மால்வாயில் வசிக்கும் சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சரபோஜி (25) என்பவரும் சோ்ந்து, சுபாஷை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த சுபாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்து சுபாஷின் தாய் மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சரபோஜியை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியைச் சோ்ந்தவா் மா. சதீஷ்குமாா் (32), இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த இவரையும், பெட்ரோல் பங்க் உரிமையாளரையும், அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பா. ஹரிஹரன் (22) தாக்கினாா்.
இதுகுறித்து சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ஹரிஹரனை ஏப்ரல் 6-ஆம் தேதி கைது செய்தனா்.
மேற்கண்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டமூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா செடி வளா்த்த 3 போ் மீது வழக்கு

புழல் சிறைக்குள் கைதிகள் மோதல்: 12 போ் மீது வழக்கு

மாலத்தீவுக்கு கஞ்சா எண்ணெய் அனுப்பிய 2 போ் மீது வழக்கு

போக்ஸோ வழக்கு குற்றவாளி உள்பட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
