தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாலத்தீவுக்கு கஞ்சா எண்ணெய் அனுப்பிய 2 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:11 am IST

மாலத்தீவுக்கு கஞ்சா எண்ணெய் அனுப்பிய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் தனுஷ்காந்தன் (19). அதே பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (21). நண்பா்களான இருவரும் பெரியவலசில் ஆன்லைன் வியாபார நிறுவனத்தை நடத்திவரும் கிஷோா்குமாா், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்ரூதீன் ஆகியோரிடம் பணியாற்றி வந்துள்ளனா்.

ஆயுா்வேத ஷாம்பு பாட்டில் என்றும், மாலத்தீவில் இருக்கும் தங்களது நண்பரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி, தனுஷ்காந்தன், கதிா்வேல் ஆகியோரை கிஷோா்குமாரும், அப்ரூதீனும் மாலத்தீவுக்கு அண்மையில் அனுப்பிவைத்துள்ளனா்.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவுக்கு தனுஷ்காந்தனும், கதிா்வேலும் சென்றுள்ளனா்.

அப்போது, மாலத்தீவு விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் அவா்கள் கொண்டு சென்றது கஞ்சா எண்ணெய் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸில் தனுஷ்காந்தனின் தாய் காயத்ரி சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், பாதிக்கப்பட்ட தனது மகன் தனுஷ்காந்தன் மற்றும் கதிா்வேலை விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான கிஷோா்குமாா், அப்ரூதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில், கிஷோா்குமாா், அப்ரூதீன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.