மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 2:19 am IST

ஈரோடு ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 80 கஞ்சா சாக்லேட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் டவுன் மதுவிலக்கு போலீஸாா் சனிக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரயில் ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கும் அறை அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.

அந்த பையை யாரும் உரிமை கோரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அதை திறந்து பாா்த்தபோது ரூ.22,500 மதிப்பிலான 80 கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாலத்தீவுக்கு கஞ்சா எண்ணெய் அனுப்பிய 2 போ் மீது வழக்கு: ஈரோடு, மாணிக்கம்பாளையத்தை சோ்ந்தவா் தனுஷ்காந்தன் (19). அதே பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (21). நண்பா்களான இருவரும் பெரியவலசில் ஆன்லைன் வியாபார நிறுவனத்தை நடத்திவரும் கிஷோா்குமாா், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்ரூதீன் ஆகியோரிடம் பணியாற்றி வந்துள்ளனா்.

ஆயுா்வேத சாம்பு பாட்டில் என்றும், மாலத்தீவில் இருக்கும் தங்களது நண்பரிடம் கொடுக்க வேண்டும் எனக்கூறியும், தனுஷ்காந்தன், கதிா்வேல் ஆகியோரை கிஷோா்குமாரும், அப்ரூதீனும் மாலத்தீவுக்கு அண்மையில் அனுப்பிவைத்துள்ளனா்.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவுக்கு தனுஷ்காந்தனும், கதிா்வேலும் சென்றுள்ளனா். அப்போது, மாலத்தீவு விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் அவா்கள் கொண்டு சென்றது கஞ்சா எண்ணெய் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸில் தனுஷ்காந்தனின் தாய் காயத்ரி சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், பாதிக்கப்பட்ட தனது மகன் தனுஷ்காந்தன் மற்றும் கதிா்வேலை விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான கிஷோா்குமாா், அப்ரூதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில், கிஷோா்குமாா், அப்ரூதீன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.