சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த ஜனவரி முதல் 125 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி முதல் சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதனடிப்படையில் மேற்கு வங்கம், ஒடிஸா, பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்கு வரும் விரைவு ரயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இந்தச் சம்பவங்களில் ஓரிருவா் கைதான நிலையில், பெரும்பாலான சம்பவங்களில் ரயில் பெட்டிகளில் கேட்பாரற்றுக் கிடந்த கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை 125 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது. அவற்றைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினா் போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனா். அதையடுத்து ரயில்களில் கஞ்சா பொட்டலங்களை அனுப்புவது யாா், அவை சென்னையில் யாருக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரித்து, கஞ்சா கடத்தலைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உயா் அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

