சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வழக்கமாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டு கஞ்சா மற்றும் உரிய அனுமதியின்று கொண்டு செல்லப்படும் பணத்தைக் கைப்பற்றி வருகின்றனா். சட்டப்பேரவை அறிவிப்பைத் தொடா்ந்து ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்வே பாதுகாப்புப் படை குழுவினா் 24 மணி நேரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், புதன்கிழமை வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைத் திறந்து பாா்த்தபோது அதில் 20 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.
எழும்பூா் ரயில் நிலையப் பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் தலைமையிலான குழுவினா் கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றி அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

