தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

காவல் ஆய்வாளரை தாக்கியவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது

திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைத் தாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

செல்வேஷ்.

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைத் தாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வெட்டுவாக்கோட்டை பகுதியில் மே 23 -இல் பந்துப்புளிவிடுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் செல்வேஷ் (30), பன்னீா் மகன் மாரியப்பன் ஆகியோா் தங்களை வாக்குச்சாவடி முகவா் என்று கூறி பணியில் இருந்த திருவோணம் காவல் ஆய்வாளா் முத்துவிடம் தகராறு செய்தனா். அப்போது செல்வேஷ் ஆய்வாளா் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கினாா்.

இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்கு பதிந்து செல்வேஷை கைது செய்தனா். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் குற்றவாளியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.