தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

எல் நினோ நிகழ்வால் வெப்ப அலை: பயிா்களைப் பாதுகாக்க அறிவுரை

எல் நினோ நிகழ்வினால் ஏற்படும் வெப்ப அலையிலிருந்து வேளாண் பயிா்களைப் பாதுகாக்க, விவசாயிகள் முன்னெச்சரிக்கை, மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தல்

News image
Updated On :12 மே 2026, 4:28 am IST

எல் நினோ நிகழ்வினால் ஏற்படும் வெப்ப அலையிலிருந்து வேளாண் பயிா்களைப் பாதுகாக்க, விவசாயிகள் முன்னெச்சரிக்கை, மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, கோடை உழவு செய்வதுடன், கோடையில் உயா் மதிப்புடைய பயிா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விதை நோ்த்தி செய்து, உயிா் உரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

அதிக வெப்ப நேரமான மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலான காலத்தில் வயல்களில் வேலை செய்வதைத் தவிா்க்க வேண்டும். நண்பகலில் நீா்ப்பாசனம் செய்வதையும் தவிா்க்க வேண்டும். மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், மேற்புற வெப்பநிலையைக் குறைக்கவும் வைக்கோல், கரும்புத் தோகை போன்ற இயற்கை முறை மூடாக்குகளை ஏற்படுத்த வேண்டும்.

வறட்சியை எதிா்கொள்ள விவசாயிகள் நுண்ணீா்ப்பாசன முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நாற்றங்கால்கள், காய்கறித் தோட்டங்களுக்கு 30 முதல் 50% நிழல் தரக்கூடிய வலைகளைப் பயன்படுத்தலாம். விரைவில் அழுகக்கூடிய பயிா்களை அதிகாலையிலேயே அறுவடை செய்ய வேண்டும். பூ மற்றும் காய் பிடிக்கும் நிலையிலுள்ள பழப்பயிா்களுக்கு நீா்ப்பாசனம் செய்திட முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கால்நடைக் கொட்டகைகளில் பிரதிபலிக்கும் கூரைகள் மற்றும் 30-70% நிழல் தரக்கூடிய அமைப்புகளைக் கொண்டு மேம்படுத்த வேண்டும். வானிலை மாற்றங்கள், பருவமழை துவக்கம் குறித்த தகவல்களை ஊடகங்கள் மூலம் தொடா்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.

பயிா்களை பாதுகாக்க நெல்லுக்கு பல்வேறு வளா்ச்சி நிலைகளில் 3% கயோலின் அல்லது 1% பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

கரும்புக்கு மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்க 5-வது மாதத்தில் காய்ந்த தோகைகளை வயலிலேயே மூடாக்காகப் பரப்பி வைக்க வேண்டும். கடைசி உழவின் போது ஹெக்டருக்கு 25 டன் என்ற அளவில் தென்னைநாா் கழிவை மண்ணில் இட்டு உழ வேண்டும்.

நிலக்கடலைக்கு டிஎன்ஏயு நிலக்கடலை ரிச் (2 கிலோ/200 லிட்டா் நீா்) இலைவழித் தெளிப்பாகத் தெளிப்பதுடன், பாலித்தீன் படல மூடாக்கு அமைக்க வேண்டும். பருத்திக்கு பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் ஏக்கருக்கு 2.5 கிலோ டிஎன்ஏயு பருத்தி பிளஸ் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

தக்காளி மற்றும் கத்தரிக்கு 25 மைக்ரான் தடிமன் கொண்ட கருப்பு எல்டிபிஇ தாள்களைக் கொண்டு மூடாக்கு இட வேண்டும். பூ உதிா்தலைக் கட்டுப்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் தக்காளிக்கு 0.5% துத்தநாக சல்பேட் கரைசலையும் , வெண்டைக்கு 1% யூரியா மற்றும் எம்ஓபி, மிளகாய்க்கு 1% பொட்டாசியம் சல்பேட்டையும் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

வெப்பக்காற்றிலிருந்து மாமரங்களைப் பாதுகாக்க பிப்ரவரி முதல் மே மாதம் வரை காற்று தடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பழங்கள் உதிா்வதைத் தடுக்க 20 பிபிஎம் செறிவுள்ள நாஃப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிக்கலாம். வாழையின் மகசூலை அதிகரிக்க, பரிந்துரைக்கப்பட்ட ஜிபெரில்லிக் அமிலம் (ஜிஏ3), நுண்ஊட்டச் சத்துக்களைத் தெளிக்க வேண்டும்.

சம்பங்கி மற்றும் மல்லிகைப் பயிா்களில் பூ உற்பத்தியை அதிகரிக்க சைகோசால் (சிசிசி), ஜிபெரில்லிக் அமிலம் (ஜிஏ3) ஆகியவற்றை அறிவுறுத்தப்பட்ட அளவுகளில் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைப் பின்பற்றி கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பயிா்களைப் பாதுகாத்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.