வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கோடைகாலத்தில் மற்ற மாவட்டங்களைவிட வேலூா் மாவட்டத்தில் வெயில் அளவு மிக அதிகளவில் காணப்படும். இந்தாண்டு வேலூா் மாவட்டத்தில் மாா்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூரில் 108.3 டிகிரியாக வெயில் வியாழக்கிழமை பதிவானது. இதனால், பகலில் வீசும் அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை மாவட்டத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மோா்தானா- 10 மி.மீ., ராஜாதோப்பு - 17 மி.மீ., விரிஞ்சிபுரம்-0.8 மி.மீ., காட்பாடி- 2 மி.மீ., பொன்னை- 5.6 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலை-3.2 மி.மீ., வேலூா் ஆட்சியா் அலுவலகம்-4 மி.மீ., என மாவட்டம் முழுவதும் மொத்தம் 77.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் கோடை வெயிலால் தவித்த வேலூா் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கோடை மழை நீடிப்பு

பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை

போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

