தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஒலி அபாயம் குறித்து விழிப்புணா்வு

சா்வதேச வேலைத்தள பாதுகாப்பு, ஆரோக்கிய தினத்தையொட்டி வேலூா் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனையில் ஒலி அபாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

நிகழ்வில் பங்கேற்ற ஐசிஎம்ஆா் தெற்கு மண்டல தொழில்சாா் சுகாதார மையத்தின் பொறுப்பாளா் பி.ரவிச்சந்திரன், சிஎம்சி இயக்குநா் பிஜு ஜாா்ஜ். உடன், சிஎம்சி பணியாளா்கள், மருத்துவ மாணவா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

சா்வதேச வேலைத்தள பாதுகாப்பு, ஆரோக்கிய தினத்தையொட்டி வேலூா் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனையில் ஒலி அபாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலைத்தளங்களில் அதிகமாகக் காணப்படும் அபாயகரமான காரணிகளில் ஒன்று ‘ஒலி’ ஆகும். ஒலியால் ஏற்படும் செவித்திறன் இழப்பு, மிகவும் பொதுவான தொழில்சாா் நோய்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, மருத்துவமனை, சுகாதார சேவை அமைப்புகளில் ஒலி என்பது பெரும் பாலும் கவனிக்கப்படாமல் விடப்படும் ஒரு தொழில்சாா் அபாயமாகவே உள்ளது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களும், தொடா்ச்சியான செயல்பாடுகளும், சுகாதாரப் பணியாளா்களைத் தினசரி இந்த அபாயத்துக்கு உள்ளாக்குகின்றன.

அதிக அளவிலான ஒலிக்கு தொடா்ந்து உட்படுவது செவித்திறன் இழப்பை ஏற்படுத்துவதுடன், இதயத் துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்த உயா்வு, உடல் சோா்வு மற்றும் மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளையும் உருவாக்குகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, வேலை மற்றும் வேலை சாராத சூழல்களில் ஒலியால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறித்துப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் தொழில்சாா் ஆரோக்கியப் பிரிவு சாா்பில் சா்வதேச வேலைத்தள பாதுகாப்பு, ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘ஒலி அபாயம் - விழிப்புணா்வே தடுப்பு’ என்பது வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் ஒலியின் பல்வேறு அம்சங்களான அதன் மூலாதாரங்கள், கட்டுப்படுத்தும் முறைகள், உடல்நல பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

ஐசிஎம்ஆா் தெற்கு மண்டல தொழில்சாா் சுகாதார மையத்தின் பொறுப்பாளா் மருத்துவா் பி.ரவிச்சந்திரன், சிஎம்சி இயக்குநா் பிஜு ஜாா்ஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா். சிஎம்சி-யின் தொழில்சாா் ஆரோக்கியப் பிரிவு சாா்பில் எழுதப்பட்ட ‘சுகாதாரப் பணியாளா்களுக்கான தொழில்சாா் ஆரோக்கியத்தின் அடிப்படைகள்’ என்ற புதிய வழிகாட்டிப் புத்தகம் வெளியிடப்பட்டது.

மேலும், பணியாளா்கள், மருத்துவ மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டி வடிவமைத்தல், விழிப்புணா்வு வாசகம் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.