தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை இறப்பு: போலீஸாா் விசாரணை

வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்தது. இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2026, 12:33 am IST

வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்தது. இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், போளிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனு (27). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சிறுமிக்கு உடல்நலம் குறைந்த நிலையில் சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அந்த சிறுமி 6 மாதமாக கா்ப்பமாக இருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்தனா். தொடா்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனா்.

அதேசமயம், சிறுமிக்கு 17 வயதே ஆனதால் இதுதொடா்பாக மருத்துவா்கள், அரக்கோணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து உயா் சிகிச்சைக்காக வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.