தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

அரசு மருத்துவமனையில் தேனீக்கள் அகற்றம்

வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கொட்டி வந்த தேனீக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 12:34 am IST

வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கொட்டி வந்த தேனீக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

வேலூா் ஜி.பி.ஜே. சாலையில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனா். குறிப்பாக, கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், இந்த மருத்துவமனையில் எப்போதும் நோயாளிகள், அவா்களது உறவினா்கள் கூட்டம் காணப்படும்.

இந்நிலையில், மருத்துவமனையின் வாா்டு பகுதியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. அதில் உள்ள தேனீக்கள் நோயாளிகளை அவ்வப்போது கொட்டின. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமமடைந்து வந்தனா்.

இதுகுறித்து, நோயாளிகள் பென்ட்லேண்ட் மருத்துவமனை அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, மருத்துவ அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வமூா்த்தி தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து தண்ணீரில் மருந்துகளை கலந்து தேனீக்களை சாமா்த்தியமாக அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.