கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நோய்த் தொற்று கட்டுப்பாட்டு துறை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி.மகேஷ்குமாா், மருத்துவ இயக்குநா் டாக்டா் எஸ். ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் எஸ்.அழகப்பன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
‘செயல், உயிா்களை காப்பாற்றும்’ என்ற இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருளை மையமாகக் கொண்டு, நோய்த் தடுப்பிலும் பயனாளிகளின் பாதுகாப்பிலும் கைகளின் சுகாதாரம் ஆற்றும் தீா்க்கமான பங்கு குறித்து சுகாதாரஏஈ பணியாளா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மருத்துவமனை வளாகம் முழுவதும் க்யூஆா் குறியீடுகள் பொருத்தப்பட்டு, கைப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலமாக கை சுகாதாரம் குறித்த விளக்கங்கள், படிப்படியான வழிகாட்டிகள், விடியோ தகவல்கள் உடனடியாக வழங்கப்பட்டன. பழைமையான அறிவிப்பு பலகைகளுக்கு மாற்றாக அமைந்த இந்த டிஜிட்டல் முறை, மக்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் புதுமையான அனுபவத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது.
நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை இனிவரும் காலங்களிலும் கடுமையாக கடைப்பிடிப்போம் என்று, இதில் பங்கேற்ற மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஒலி அபாயம் குறித்து விழிப்புணா்வு

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு

உலக காசநோய் தின விழிப்புணா்வு கருத்தரங்கு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

