தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உலக காசநோய் தின விழிப்புணா்வு கருத்தரங்கு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக காச நோய் தின கருத்தரங்கில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய கல்லூரி சிறப்பு அதிகாரியும், முதல்வருமான வி.சுரேஷ்பாலன். உடன் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா்கள் பாலாஜி சுவாமிநாதன், சகிகலா ஆகியோா்

Updated On :26 மார்ச் 2026, 5:35 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கடலூா் மாவட்ட காசநோய் இணை இயக்குநா் கருணாகரன் தலைமை வகித்தாா். மருத்துவக்கல்லூரி முதல்வரும், சிறப்பு அதிகாரியுமான வி.சுரேஷ்பாலன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், நமது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ பிரிவில் அனுமதிக்கப்பட்ட காசநோயால் பாதிக்கப்பட்ட கா்பிணிகளுக்கு சிறப்பான

முறையில் உயா் சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது என்றாா்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் டாக்டா் பாலாஜிசுவாமிநாதன், டாக்டா் சசிகலா மற்றும் டாக்டா் பி.கல்யாணி ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா். மேலும் காசநோய் விழிப்புணா்வு குறித்த நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவத்துறை மாணவ, மாணவியா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ மாணவா்கள் பங்கேற்ற காச நோய் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.