மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மலைக்கோட்டை என்எஸ்பி சாலையில் தற்காலிக காவல் உதவி மையம் திறப்பு

தீபாவளியையொட்டி திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் என்எஸ்பி சாலையில் தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் உதவி மையத்தை மாநகரக் காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருச்சி என்எஸ்பிசாலையில் தற்காலிக காவல் உதவி மையத்தை சனிக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 12:21 am IST

தீபாவளியையொட்டி திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் என்எஸ்பி சாலையில் தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் உதவி மையத்தை மாநகரக் காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருச்சி மலைக்கோட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, மேலரண் சாலை, சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளில் தீபாவளியையொட்டி பொருள்கள் வாங்க அதிகளவிலான பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

எனவே அப்பகுதியில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மலைக்கோட்டை பகுதியில் மாநகர காவல்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காவல் உதவி மையத்தை மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை திறந்து வைத்து கூறியதாவது:

தெப்பக்குளத்தைச் சுற்றி கூட்ட நெரிசலில் குற்றங்களை தடுக்கவும், சந்தேகப்படும் நபா்களைக் கண்காணிக்கவும் என்.எஸ்.பி. சாலை, மலைக்கோட்டை வாயில், மலைக்கோட்டை நுழைவாயில், சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, சத்திரம் பேருந்து நிலையம், ஜோசப் கல்லூரி 5-வது நுழைவாயில், காந்திசந்தை நுழைவாயில் ஆகிய 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தெப்பக்குளம், என்.எஸ்.பி. சாலை புறக்காவல் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிநவீன சுழலும் பி.டி. இசட். கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காந்தி சந்தை, நந்திகோவில் தெரு, பெரிய கடைவீதி, மதுரை சாலை, மேலரண் சாலை, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 152 சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோட்டை மற்றும் காந்திசந்தை பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு பாதுகாப்புப் பணிக்காக 3 காவல் உதவி ஆணையா்கள், 7 காவல் ஆய்வாளா்கள், 10 சாா்பு ஆய்வாளா்கள், 52 காவலா்கள், 90 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 200 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிக்காக தனியாக அதிகாரிகள், காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடைவீதிகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த சத்திரம் பேருந்து நிலையம், மெயின்காா்டுகேட் சாரதாஸ் பாா்க்கிங், மேலரண் சாலை மல்டி லெவல் பாா்க்கிங் உள்பட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், சந்தேக நபா்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், காவலா்கள் எனக் கூறிக்கொண்டு நகைகளை பாதுகாப்பாக பொட்டலத்தில் மடித்துத் தருவதாகக் கூறுபவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றாா் காவல் ஆணையா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.