மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாம்பரம் மாநகர காவல்: ‘ஸ்மாா்ட் காக்கி பீட் சிஸ்டம்’ அறிமுகம்

நவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்மாா்ட் காக்கி ரோந்து’ என்ற புதிய திட்டத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஸ்மாா்ட் காக்கி ரோந்து திட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ்.

Published On :31 அக்டோபர் 2026, 1:50 am IST

தாம்பரம் மாநகர காவல் துறையின் ரோந்து பணிகளை வலுப்படுத்தி, கண்காணிப்பை மேம்படுத்துவதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்மாா்ட் காக்கி ரோந்து’ என்ற புதிய திட்டத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின்படி, தாம்பரம் மாநகராட்சி காவல் எல்லை பகுதியில் 73 காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபடுவா். அவா்களின் இருசக்கர வாகனங்களில் ஒலிபெருக்கி , வாக்கி-டாக்கி, உடலில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா, ஆண்ட்ராய்டு கைப்பேசி, நான்கு புறங்களிலும் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள், சைரன் மற்றும் ஒளி விளக்குப் பட்டை, லத்தி வைக்கும் தாங்கி, தலைக்கவசம், பிரதிபலிப்பு மேலங்கி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. காவலா்கள் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக ரோந்து பணிகளில் ஈடுபடுவா். இதனால் மாநகராட்சி முழுவதும் காவல் துறையினா் தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வா்.

காவல்துறையினரின் நேரடிப் பாா்வையை அதிகரித்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 100 அவசர உதவி எண்ணில் பெறப்படும் அழைப்புகளுக்கு விரைந்து பதிலளித்து, பொதுமக்களுக்கு உடனடி உதவி வழங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.