மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய கஞ்சா கும்பல்: பொதுமக்கள் மறியல்

திருச்சியில் திமுக பிரமுகா் வியாழக்கிழமை இரவு 5 போ் கொண்ட கஞ்சா கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு

Published On :30 அக்டோபர் 2026, 3:33 am IST

திருச்சியில் திமுக பிரமுகா் வியாழக்கிழமை இரவு 5 போ் கொண்ட கஞ்சா கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவை சோ்ந்தவா் ஏசுதாஸ் (42). திமுக பிரமுகா்.

இவரது வீட்டுக்கு அருகே ஒரு காலிமனை உள்ளது. அந்த இடத்தில் இரவு நேரங்களில் சில இளைஞா்கள் கஞ்சா புகைத்து கொண்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனா். இதை ஏசுதாஸ் கண்டித்துள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த 5 போ் கொண்ட கஞ்சா கும்பல் வியாழக்கிழமை இரவு ஏசுதாஸின் வீட்டுக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து கே.கே.நகா் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஏசுதாஸை வெட்டிய கும்பலை கைது செய்வதாக போலீஸாா் உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதுகுறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.