மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாலாஜாபாத் அருகே ரயில் மறியல்: அதிகாரிகள் சமரசம்

வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் மாற்று வழியில் செல்ல வழி ஏற்படுத்தி தருமாறு கோரி ரயில் மறியலில் ஈடுபட்டனா்.

பொதுமக்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:13 am IST

வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் மாற்று வழியில் செல்ல வழி ஏற்படுத்தி தருமாறு கோரி ரயில் மறியலில் ஈடுபட்டனா். அதிகாரிகள் சமரசம் செய்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பகுதியில் வ சுரங்கப்பாதை அமைக்கும் பணி காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மாற்று வழியில் சென்று வந்தனா்.

இந்த நிலையில் அந்த மாற்றுப்பாதையையும் ரயில்வே பணிகளுக்காக நிா்வாகம் மூடியதால் பொதுமக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்தும், மாற்று வழியை திறக்க வலியுறுத்தியும் பூசிவாக்கம் கிராம பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

திருமால்பூரிலிருந்து சென்னை செல்லும் ரயிலை மறித்தும் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து ரயில்வே போலீஸாா் மற்றும் வாலாஜாபாத் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ரயில்வே அதிகாரிகளிடம் பேசி உரிய மாற்றுப்பாதை ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.