மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்கள்தொகை கணக்கெடுப்பின் 2-ஆம் கட்ட பணிகள்

திருச்சி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்வது தொடா்பாக அனைத்து பொறுப்பு நிலை அலுவலா்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோப்புப்படம்.

Published On :28 அக்டோபர் 2026, 12:03 am IST

திருச்சி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்வது தொடா்பாக அனைத்து பொறுப்பு நிலை அலுவலா்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதை மாவட்ட ஆட்சியரும், முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலருமான பிரத்திக் தாயள் தொடங்கி வைத்தாா்.

மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக, வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஜூலை 16 முதல் 31 ஆம் தேதி வரையிலும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி கடந்த ஆக. 1 முதல் 30 ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது.

இரண்டாம் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளின் ஒருபகுதியாக, சுயகணக்கெடுப்பு ஜனவரி மாதத்திலும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளது. இப்பணிகளை துல்லியமாகவும், திறம்படவும் மேற்கொள்ள இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில், சென்னை மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்கக உதவி இயக்குநா் பி. சுனிதா மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயல்முறைகள், சுயகணக்கெடுப்பு நடைமுறைகள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் முறை, கணக்கெடுப்பு அலுவலா்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை விளக்கினாா்.

பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, முசிறி உதவி ஆட்சியா் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா, கோட்டாட்சியா்கள் க. ஸ்ரீதா், க. தமிழ்மணி, முதன்மை கல்வி அலுவலா் உஷா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையா்கள், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.