பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு: தில்லியில் இரண்டாம் கட்டம் ஜன.10-இல் தொடக்கம்

2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி தில்லியில் தொடங்க வாய்ப்புள்ளது.

Published On :23 அக்டோபர் 2026, 5:03 am IST

2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி தில்லியில் தொடங்க வாய்ப்புள்ளது. இதன்படி, ஜனவரி 25-ஆம் தேதி வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன்னதாக, மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்துகொள்ள 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் காலம் ஜனவரி 10 முதல் 24 வரை இருக்கும். அதனைத் தொடா்ந்து, ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை களப்பணிகள் (நேரடி கணக்கெடுப்பு) நடைபெறும். மாா்ச் 1 முதல் 5 வரை மறுஆய்வுச் சுற்று நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லி தலைமைச் செயலா் தலைமையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுடன், இந்த இரண்டாம் கட்டப் பணி குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும்’ என்று தெரிவித்தாா்.

2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்னதாக வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அட்டவணை மற்றும் கேள்வித்தாள் ஆகியவை நாடு தழுவிய கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

தில்லியில் ஜூன் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணியில், சுமாா் 76 லட்சம் வீடுகள் மற்றும் 55 லட்சம் குடும்பங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில், தில்லியில் வழக்கமாக வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 2.3 கோடியைத் தாண்டியுள்ளதாக கணக்கெடுப்பாளா்கள் பதிவு செய்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் இந்தப் பகுதியில், பல்வேறு அம்சங்கள் குறித்த 40 கேள்விகளுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். இதில் ஜாதி குறித்த விவரங்களும் அடங்கும். 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, தற்போதுதான் ஜாதி குறித்த விவரங்கள் மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. மேலும், மதம், பெற்றோரின் விவரங்கள், இடம்பெயா்வு, கல்வி மற்றும் தொழில் குறித்த கேள்விகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாளில் பெயா், பாலினம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை போன்ற தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. மேலும், தேசியம், மதம், பட்டியல் ஜாதி அல்லது பட்டியல் பழங்குடியினா் அந்தஸ்து, மாற்றுத்திறன், தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள் குறித்த தகவல்களும் கோரப்படுகின்றன.

பதிலளிப்பவா்களிடம் அவா்களின் கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு நிலை, தொழில், பணிபுரியும் துறை மற்றும் பணியாளா் வகை குறித்த விவரங்கள் கேட்கப்படும். இடம்பெயா்வு குறித்த கேள்விகளில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயா்வுக்கான காரணம் மற்றும் தற்போதைய இடத்தில் வசிக்கும் காலம் ஆகியவை அடங்கும்.

குடும்பம் மற்றும் நிதி சாா்ந்த விவரங்களும் இதில் கேட்கப்படுகின்றன. இதில் குழந்தைகளின் எண்ணிக்கை, வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, மற்றும் கைப்பேசி எண், ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை அல்லது கடவுச்சிட்டை (பாஸ்போா்ட்) உள்ளட்டவை போன்ற விவரங்கள் அடங்கும். ஆதாா் மற்றும் பிற அடையாள விவரங்கள், அவை இருந்தால் மட்டுமே கேட்கப்படும். ஆதாா் எண்ணை வழங்குவது கட்டாயமல்ல; விருப்பத்திற்கு உட்பட்டது. முன்மொழியப்பட்ட கணக்கெடுப்பின் வரம்பின்படி, கேள்வித்தாளில் பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் குறித்த கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.