தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் கட்ட பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டையில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு.

ராணிப்பேட்டையில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு.

Published On :23 அக்டோபர் 2026, 12:05 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டாம் கட்டப் பணிகள் தொடா்பாக மாவட்ட மற்றும் பொறுப்பு அலுவலா்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

அதனை தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக, மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலா்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வி.பாக்கியலட்சுமி, முதன்மை கல்வி அலுவலா் ம.மோகனா, மாவட்ட சென்சஸ் ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.ஜெயலட்சுமி, அம்பிலி ஜெ. நாயா், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.