கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜன.25 முதல் பிப்.28 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆணையா் அறிவிப்பு

நாடு முழுவதும் வீடு வீடாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி, அடுத்த ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும்

Published On :31 அக்டோபர் 2026, 2:31 am IST

நாடு முழுவதும் வீடு வீடாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி, அடுத்த ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும் என்று இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள்தொகை ஆணையா் மிருத்யுஞ்சய் குமாா் நாராயண் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில், ‘2027, மாா்ச் 1-ஆம் தேதியை காலக்கெடு நாளாகக் கொண்டு, ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெறும். பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் பனிப்பொழிவு காணப்படும் லடாக், ஹிமாசல பிரதேம், ஜம்மு-காஷ்மீா் பகுதிகளைத் தவிர நாடு முழுவதும் பிற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணி நடைபெறும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ‘மறுபரிசீலனை சுற்று’ மாா்ச் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும். வீடு வீடாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் முன்பாக ஜனவரி 10 முதல் 24 வரை சுய கணக்கெடுப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் எண்ம மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சிறப்புக்குரிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.