மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

50 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 5 போ் கைது

கைது - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:36 am IST

திருச்சியில் வெவ்வெறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காட்டூா் பகுதியில் திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் யோகரத்தினம் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனை செய்தனா். அப்போது அவ்வழியே சந்தேகப்படும் வகையில் ஒரு பையை இழுத்துச் சென்ற இருவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த பா. மாலூா் நடராஜா (49), ஜாா்க்கண்ட் மாநிலம், போகாரா பகுதியைச் சோ்ந்த அ. தரணிகுமாா் தாஸ் (23) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

23 கிலோ கஞ்சா பறிமுதல்: திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் பிரபு தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை மாலை ரோந்து சென்றனா்.

அப்போது மணிகண்டத்தை அடுத்து அருவாக்குடி ரயில்வே கடவுப் பாதையில் நின்ற இருவரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள், கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த கி. குமரன் (55), சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த செ. பிரபு (32) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: இதேபோல, திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூபதி தலைமையிலான போலீஸாா் திருச்சி - திண்டுக்கல் சாலையில் பிராட்டியூரில் சனிக்கிழமை ரோந்து சென்றபோது பிராட்டியூா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற பெண்ணைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா், ராம்ஜி நகா் கே. கல்லுக்குடியைச் சோ்ந்த ஆா். சுசீலா (55) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.