மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டு பல்துறை ஆராய்ச்சியை வலுப்படுத்திட என்ஆா்சிபி- விஐடி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கூட்டு பல்துறை ஆராய்ச்சியை வலுப்படுத்தும் வகையில் திருச்சி என்ஆா்சிபி- விஐடி சென்னை இடையை வெள்ளிக்கிழமை கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தம்.

Published On :24 அக்டோபர் 2026, 5:02 am IST

கூட்டு பல்துறை ஆராய்ச்சியை வலுப்படுத்தும் வகையில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (என்ஆா்சிபி) மற்றும் வேலூா் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்- சென்னை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், திருச்சி மாவட்டம், தாயனூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்துடன், விஐடி-சென்னைஇணைந்து, வாழை ஆராய்ச்சி மற்றும் வளா்ந்து வரும் துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, மாணவா் பங்கேற்பு மற்றும் ஆசிரியா் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் நோக்கம், வாழை ஆராய்ச்சியில் வாழை ஆராய்ச்சி மையம் கொண்டுள்ள நிபுணத்துவத்தையும், உயிரி-அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் விஐடி, கொண்டுள்ள வலிமையையும் ஒருங்கிணைத்து, பல்துறை சாா்ந்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதாகும்.

நிகழ்வில், வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஆா். செல்வராஜன் பேசுகையில்,

வளா்ந்து வரும் ஆராய்ச்சி சவால்களை எதிா்கொள்வதற்கும், வாழைத் துறைக்கான புதுமையான தொழில்நுட்பத் தீா்வுகளை உருவாக்குவதற்கும் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

தமிழ்நாட்டில் ஹைப்பா் ஸ்பெக்ட்ரல் ட்ரோன்கள் மற்றும் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி வாழைப் பயிா்களின் பரவலை வரைபடமாக்க இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்றாா்.

விஐடி- (சென்னை) இணை வேந்தா் டி. தியாகராஜன் கூறுகையில், வாழையை அடிப்படையாகக் கொண்ட சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் வாழை கழிவுகளை கொண்டு மதிப்புக் கூட்டி புதிய மின்சாரப் பயன்பாட்டுப் பொருள்களை உருவாக்குதல் ஆகியவை முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகளாக அமையும் என்றாா்.

விஐடி-சென்னை உயிா்-அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் கல்லூரியின் முதன்மையா் ஜி. ஜெயராமன், அக்கல்லூரியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.

முன்னதாக வாழை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் வணிக மயமாக்கல் பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலா் கே. நாகேந்திரன் வரவேற்றாா். நிறைவாக இணை ஒருங்கிணைப்பு அலுவலா் பிரமோத் ஷெலேக் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.