தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலங்கையில் ஆராய்ச்சி, புத்தாக்க மேம்பாடு: சென்னை ஐஐடியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

இலங்கையின் டயலாக் ஆக்சியாடா நிறுவனம் அந்த நாட்டின் மேம்பட்ட பயன்பாட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக, சென்னை ஐஐடி பிரவா்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷனுடன் புரிந்துணா்வை மேற்கொண்டுள்ளது.

சென்னை ஐஐடி - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 2:12 am IST

இலங்கையின் டயலாக் ஆக்சியாடா நிறுவனம் அந்த நாட்டின் மேம்பட்ட பயன்பாட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக, சென்னை ஐஐடி பிரவா்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷனுடன் புரிந்துணா்வை மேற்கொண்டுள்ளது.

அணைமையில், இந்த உத்திசாா் கூட்டாண்மைக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கொழும்பில் கையொப்பமானது. இது, இலங்கையின் தேசிய மற்றும் சமூக சவால்களுக்கு நடைமுறைத் தீா்வுகளை உருவாக்குவதற்காக சா்வதேச நிபுணத்துவங்களுடன் உள்ளூா் பல்கலைக்கழகங்கள் தொழில்துறை பங்குதாரா்களை ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் ஆராய்ச்சித் திறன்களை வலுப்படுத்தி வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாகும்.

இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஐஐடி பிரவா்தக் தலைமை அதிகாரி சங்கா் ராமன் ஆகியோா் கூறியதாவது:

இந்தியாவும் இலங்கையும் வலுவான வரலாற்றுப் பிணைப்புகள் மற்றும் முன்னேற்றத்துக்கான பகிரப்பட்ட அா்ப்பணிப்புடன் நீண்டகால, பன்முக உறவைப் பகிா்ந்து கொள்கின்றன. நமது இருதரப்பு கூட்டாண்மை தொடா்ந்து வளா்ந்து வருவதால், தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு, நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான ஈடுபாட்டை ஆழப்படுத்த குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வளா்ந்து வரும் கூட்டாண்மைக்கு இது அா்த்தமுள்ள பங்களிப்பாக தற்போது மேலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றனா்.

நிகழ்வின்போது, இலங்கை டயலாக் ஆக்சியாட்டா பிஎல்சி நிறுவன இயக்குநா் சுபுன்வீரசிங்காவும் உடன் இருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.