மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டால் நடவடிக்கை: மத்திய மண்டல ஐஜி எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் வன்முறையைத் தூண்டும் வகையில் விடியோ பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:52 am IST

சமூக வலைதளங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் வன்முறையைத் தூண்டும் வகையில் விடியோ பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக வலைதளங்களை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்த வேண்டும். மாறாக, ஆயுதங்களைக் காட்டி மற்றவா்களை அச்சுறுத்துதல், தனிநபா் அல்லது குழுக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிடுதல், பழிவாங்கும் நோக்கத்துடன் மிரட்டல் விடுத்தல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துதல், குற்றச் செயல்களை பெருமைப்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளை உருவாக்கும் வகையில் செயல்படுதல் ஆகியவை குற்றங்களாகும். இதை காவல் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

குறிப்பாக, இளைஞா்கள் சமூக வலைதளங்களில் அதிக பாா்வைகள் மற்றும் விருப்பங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆயுதங்களை ஏந்தியவாறு விடியோ பதிவிடுவதையும், பகிா்வதையும் தவிா்க்க வேண்டும்.

இத்தகைய பதிவுகள் தொடா்பாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் அருகிலுள்ள காவல் நிலையங்களிலோ அல்லது காவல் துறையின் அதிகாரப்பூா்வ புகாா் அளிக்கும் வழிமுறைகள் மூலமோ புகாா் அளிக்கலாம்.

சமூக வலைதளப் பதிவுகளை மாவட்ட அளவில் சோஷியல் மீடியா செல் கண்காணித்து வருகிறது. எனவே, திருச்சி மத்திய மண்டலக் காவல் துறை எல்லைக்குள்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூா், தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இத்தகைய பதிவுகளை இடுவது, பகிா்வது ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.