நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

லால்குடி அருகே கோயில் பூட்டை உடைத்து சுவாமி சிலை திருட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பழைமையான கோயிலின் பூட்டை உடைத்து சுவாமி சிலை திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 3:29 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பழைமையான கோயிலின் பூட்டை உடைத்து சுவாமி சிலை திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமாா் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழைமையானது. இக்கோயிலில் சுந்தரேஸ்வரா், மீனாட்சி அம்மன், பெருமாள், லெட்சுமி நாராயண பெருமாள், பூதேவி ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள், விஷ்ணு துா்க்கை ஆகிய சுவாமிகளுக்கு தனிதனி சந்நிதிகள் உள்ளன.

இந்நிலையில், வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை கோயிலை திறக்க அா்ச்சகா் லெட்சுமணன் வந்தபோது, கோயில் மகா மண்டபத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் மா. சுந்தரி மற்றும் போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

லால்குடி போலீஸாா் கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, மண்டபத்தில் இருந்த 11.800 கிலோ எடையுள்ள பித்தளையால் ஆன அருள்மிகு பிரதோஷ நாயனாா், பிரதோஷ நாயகி சிலை மற்றும் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில், லால்குடி காவல் ஆய்வாளா் டில்லி பாபு மற்றும் போலீஸாா் வழக்குப்பதிந்து சிலையை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.