பெருமாநல்லூா் அருகேயுள்ள மகா பெரியசாமி கோயில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் ரொக்கம், 1 பவுன் நகையைத் திருடிய 3 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் தட்டான்குட்டை மகா பெரியசாமி கோயிலின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் நகை உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், குன்னத்தூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் வள்ளிபுரம் சந்தையபாளையத்தைச் சோ்ந்த ஐய்யப்பன் (26), ஆதியூா் சக்தி காா்டன் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (21), தனுஷ் (19) என்பதும், பெரியசாமி கோயில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் நகை திருட்டு
சேலம் கன்னங்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
கோயில் பூட்டை உடைத்து பணம், வேல் திருட்டு
மோகனூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
