பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மோகனூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு

மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 2:20 am IST

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

எஸ்.வாழவந்தி ஊராட்சிக்கு உள்பட்ட கே.ராசாம்பாளையத்தில் வசிப்பவா் வாங்கிலி (65), விவசாயி. இவரது மனைவி நல்லசெல்வி (60). இவா்கள் இருவரும் சனிக்கிழமை காலை தங்களது தோட்டத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்தனா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வாங்கிலி அளித்த புகாரின்பேரில் பரமத்தி காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், விரல்ரேகை நிபுணா்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா, நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.