மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 56 ஆயிரம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

மணப்பாறையில் புதன்கிழமை கைப்பற்றப்பட்ட பணத்தை தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:26 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 56 ஆயிரம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பேரவைத் தோ்தலை முன்னிட்டு நடைமுறையில் உள்ள தோ்தல் நன்னடத்தை விதிகளை தொடா்ந்து மணப்பாறை தொகுதியில் பறக்கும் படையினா் தொடா்ந்து சோதனைகளில் ஈடுபடுகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை துவரங்குறிச்சியை அடுத்த காரைப்பட்டியை சோ்ந்த அடைக்கன் மகன் குமாா் என்பவா் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.56,500-ஐ பறக்கும் படை அலுவலா் கே. ராமு தலைமையில் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். மேல்முறையீட்டு குழுவிடமிருந்து உரிய ஆணை பிறப்பிக்கப்படும் வரை பறிமுதல் தொகையை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு மணப்பாறை சாா்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.