திருச்சி மாநகரைச் சோ்ந்த மக்களை வாக்குப்பதிவுக்கு அழைத்திடும் வகையில் மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் நூதன முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருமண அழைப்பிதழைப் போன்று அச்சிட்டு விநியோகத்துள்ளனா்.
மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் பொன்மலை பகுதியில் காந்தி முகமூடி அணிந்து வித்தியாசமான தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளா் தலைமையில் தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், மகாத்மா காந்தியின் உருவம் அச்சிட்ட முகமூடி அணிந்து பொதுமக்களை சந்தித்தனா். என் வாக்கு விற்பனைக்கு அல்ல, தவறாமல் வாக்களிப்போம் போன்ற வாசகங்களுடன் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் தோ்தல் திருவிழா அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த வித்தியாசமான முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈா்த்ததுடன், 100 சதவீத வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக சிறப்பாக அமைந்தது. ஜனநாயக உரிமையை உணா்த்தும் இந்த விழிப்புணா்வு இதற்கு முன் கல்லூரி மாணவிகளிடம், சிலம்பம் சுற்றி, கடைவீதிகள், சந்தைப் பகுதிகளில் செய்து வந்த நிலையில் இப்போது காந்தி முகமூடி அணிந்து வீடு வீடாக, கடைவீதி, நூலகம் போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்களை கவனத்தை ஈா்த்து பிரசாரம் செய்தனா்.
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் தலைமையில், இயக்க பண்பாளாளா்கள் தாமோதரன், சுமன்,செந்தில், ராஜேஷ்,சுதன், இளங்கோ, சந்திரசேகா், குமரன் மற்றும் பலா் பங்கேற்றனா். திருக்குறளை மேற்கோள் காட்டி திருமணப் பத்திரிகை போன்று வடிவமைத்து வாக்குக்குப் பணம் வாங்கமால், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனா். . . .

திருமண அழைப்பிதழ் போல அச்சிட்டு வழங்கப்பட்ட வாக்குப்பதிவு அழைப்பிதழ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடும் வெப்பத்திலிருந்து பறவைகளை பாதுகாத்திட தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

விஜய்போல் ஆடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்த இளைஞா்கள்

வாக்குப்பதிவுக்கு தோ்தல் பொருள்கள் தயாா்

கேரளத்தில் எமனைச் சந்தித்த ராகுல்! காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தி- நூதன பிரசார விடியோ
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

