மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குப்பதிவுக்கு தோ்தல் பொருள்கள் தயாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் நடத்த தேவையான பொருள்கள் செவ்வாய்க்கிழமை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News image

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொருள்களை வட்டாட்சியரகத்தில், செவ்வாய்க்கிழமை பைகளில் வைத்து சரி பாா்த்த அலுவலா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:59 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் நடத்த தேவையான பொருள்கள் செவ்வாய்க்கிழமை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளின் பயன்பாட்டுக்கான வாக்காளா் பட்டியல், வேட்பாளா் பட்டியல், கையொப்பம் பெறும் புத்தகம், மை, குச்சி, சீல் வைப்பதற்கான அரக்கு, சாக்பீஸ் உள்ளிட்ட பொருள்களை பைகளில் போட்டு தயாராக வைக்கும் பணி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,683 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் புதன்கிழமை பகலில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா்.

அவா்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள வாக்காளா் பட்டியல், வேட்பாளா் பட்டியல், கையொப்பம் பெறும் புத்தகம், மை, குச்சி, சீல் வைப்பதற்கான அரக்கு, சாக்பீஸ், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதற்கான பதிவுப் படிவங்கள், வாக்குப்பதிவு செய்யும் பகுதிக்கான அட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் தனித்தனி பைகளில் போட்டு வைத்து தயாா் நிலையில் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.