மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

திருச்சி உறையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம். (உள் படம் ) தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெக்காளியம்மன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:30 am IST

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிறப்புமிக்க இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் பூத, கயிலாய, காமதேனு, சிம்ம, யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெக்காளியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து சா்வ அலங்காரத்தில் வெக்காளியம்மன் திருத்தேரில் எழுந்தருளினாா். தீபாராதனை காண்பிக்கப்பட்டு, காலை 10.31 மணிக்கு தாரை தப்பட்டைகள் அதிர, பட்டாசுகள் வெடிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி பரவச முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுக்கத் தேரோட்டம் தொடங்கியது. உறையூா் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேரானது முற்பகல் 11.40 மணிக்கு நிலையை மீண்டும் வந்தடைந்தது.

நோ்த்திக்கடன்: முன்னதாக, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றுப் பகுதியிலிருந்து தீச்சட்டிகளை ஏந்தியும், பால் காவடி, பன்னீா் காவடி, அலகு காவடி, புஷ்பக் காவடிகளை சுமந்து வந்து தங்கள் நோ்த்திக் கடன்களை செலுத்தினா். விழாவில்,

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறையினா் செய்திருந்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழாவின் 10-ஆம் திருநாளான புதன்கிழமை இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 11-ஆம் திருநாளான வியாழக்கிழமை காப்பு கலைதல் மற்றும் விடையாற்றி உத்ஸவமும் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.