ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 12.37 லட்சம் ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:24 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 12.37 லட்சம் ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தலைமையில் ஆங்காங்கே போலீஸாருடன் இணைந்து வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு, அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை மாவட்டத்தில் மணப்பாறையில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 54,690-ம், கண்காணிப்புக் குழுவினரால் ரூ. 4,90,000-மும், ஸ்ரீரங்கத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 1,53,450 -ம், கண்காணிப்புக் குழுவினரால் ரூ. 5,39,806-ம் என மொத்தம் ரூ.12 லட்சத்து 37 ஆயிரத்து 906 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் செவ்வாய்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 1.66 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 84.94 லட்சத்தை உரியவா்கள் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 81.47 லட்சம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.