திருச்சி அருகே திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதியில் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக பிரமுகருமான காந்தி (65) என்பவரது வீட்டில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி சந்திரமௌலி, வருமான வரித்துறை அதிகாரி கதிரவன் உள்ளிட்டோா் அம்மாபேட்டை காளியம்மன் கோயில் தெருவில் உள்ள காந்தியின் வீட்டிலும், அவரது மகன்கள் வீட்டிலும் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
அப்போது காந்தி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம், 2 மகன்கள் வீட்டிலிருந்தும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 11 லட்சத்தை பறிமுதல் செய்து, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல்

வேப்பனப்பள்ளி அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ. 62 லட்சம் பறிமுதல்

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

