மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே மாடாக்குடி முடிகொண்டான் ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மாடாக்குடி -மன்னாா்குடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதைக்கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 12:21 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மாடாக்குடி முடிகொண்டான் ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி முடிகொண்டான் ஆற்றின் வெள்ளக்கரையில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வந்தனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீா்வளத்துறை அதிகாரிகள் பலமுறை அறிவிப்புகள் வழங்கினா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் நீா்வளத்துறை அதிகாரிகள் முடிகொண்டான் ஆற்றின் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளா்கள் மன்னாா்குடி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.