மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புயல் எச்சரிக்கையால் படகுகள் கடலுக்கு செல்லவில்லை! தஞ்சாவூா் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முடக்கம்! 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை இழப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக மல்லிப்பட்டினம் பகுதியில் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டுப் படகுகள்.

Published On :27 அக்டோபர் 2026, 3:00 am IST

‘அா்னாப்’ புயல் எச்சரிக்கையால், தஞ்சாவூா் மாவட்ட கடலோரப் பகுதிகளில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.

அா்னாப் புயல் எச்சரிக்கையின் காரணமாக, அக். 26 முதல் அக். 29 வரை தஞ்சாவூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில், திருவாரூா் மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை வடகாடு முதல் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை 32-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 157 விசைப்படகுகளும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. 

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவா்கள் அக். 11-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போராட்டத்தை அக். 23-இல் கைவிட்டு கடலுக்குச் செல்லவிருந்த நிலையில் , தற்போது புயல் எச்சரிக்கையால் நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை.

இதன்காரணமாக, விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளா்கள், படகுகளில் வேலை செய்யும் மீனவ தொழிலாளா்கள், மீன் ஏற்றுமதி மற்றும் விற்பனையை நம்பியுள்ள தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், தலைச்சுமை வியாபாரிகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை இழந்துள்ளனா்.

மேலும், கருவாடு காயவைக்கும் தொழில், மீன் பதப்படுத்தும் தொழில் உள்ளிட்ட உப தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மீன்பிடி தடை நீடித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். 

உப்பு உற்பத்தி பாதிப்பு: தொடா் மழை காரணமாக, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் மழைநீா் தேங்கியதால், பாத்திகளில் உருவாகி வந்த உப்பு கரைந்து சேதமடைந்தது. காயவைத்து அறுவடைக்கு தயாராக இருந்த உப்பும் நனைந்து தரம் குறைந்துள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.