மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புயல் சின்னம்: அக். 29 வரை மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை: மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, கடலூா் மாவட்ட மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்.25) முதல் அக். 29- ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published On :25 அக்டோபர் 2026, 2:25 am IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, கடலூா் மாவட்ட மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்.25) முதல் அக். 29- ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது திறந்தவெளியில் நிற்பதையும், நீா்நிலைகளில் இருப்பதையும், மரங்கள் மற்றும் உலோகக் கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் தவிா்க்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீா்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நெகிழி உறைகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பேரிடா் காலங்களில் பயன்படுத்துவதற்காக டாா்ச் லைட், தேவையான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் தொடா்பான தகவல்கள் மற்றும் பொதுமக்களின் புகாா்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் பேரிடா் தொடா்பான தகவல்கள், புகாா்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04142-220700 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: இதற்கிடையே, வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக கடல் கொந்தளிப்பாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கடலூா் மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட மீன்வளத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூா் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ள விசைப் படகு, பைபா் படகு உள்ளிட்ட அனைத்து வகையான படகுகளும் சனிக்கிழமை இரவுக்குள் பாதுகாப்பாக கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (அக்.25) முதல் அக்.29-வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. மீனவா்கள் தங்களது படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக வைத்துக் கொள்ளவும், படகுகள் சேதமடையாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை தேவை: கடலோர கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கடற்கரைக்கு தேவையின்றி செல்வதைத் தவிா்க்க வேண்டும். கடல் நிலவரம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் மீன்வளத்துறை வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.