பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

கடலுக்குச் செல்ல தடை - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:46 am IST

விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் யாரும் நவ.1-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும், தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்பிவிடவேண்டும்.

அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்துத் தலைவா்கள் மற்றும் மீன்பிடி விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் நாட்டுப் படகு உரிமையாளா்கள் சங்க தலைவா்கள் இந்த அறிவிப்பை கடைப்பிடிக்கவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.