மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Published On :22 அக்டோபர் 2026, 4:48 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்த தனிஸ்லாஸின் மகளும், ஆரோக்கியசாமியின் மனைவியுமான புனிதா ஜெயசீலி (53) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் கடந்த 20-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் ஒப்புதல் அளித்தனா்.

இதையடுத்து, அவரது கல்லீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகங்கள், கணையம், கருவிழிகள், நுரையீரல், இதய வால்வு ஆகிய 8 உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, உறுப்பு மாற்றுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது உடல் புனல்வாசலுக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு எம்எல்ஏ என். அசோக்குமாா், அரசு சாா்பில் பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அகத்தியன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இறுதிச் சடங்கில் திரைப்பட இயக்குநா் இரா.சரவணன், மருத்துவா் துரை. நீலகண்டன் மற்றும் திரளான உறவினா்கள், கிராம மக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.