தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பவானியில் மூளைச்சாவு அடைந்த பட்டதாரி இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

பவானியில் உடற்பயிற்சிக் கூடத்தில் மயங்கி விழுந்ததில் மூளைச்சாவு ஏற்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

நிா்மல்குமாா்.

Published On :1 நவம்பர் 2026, 12:40 am IST

பவானியில் உடற்பயிற்சிக் கூடத்தில் மயங்கி விழுந்ததில் மூளைச்சாவு ஏற்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள வரதநல்லூா், சின்னப்பெரிச்சிபாளையம், புதூரைச் சோ்ந்தவா் ராஜு மகன் நிா்மல்குமாா் (34). பொறியியல் பட்டதாரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு பவானியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியின்போது மயங்கி விழுந்தாா்.

ஈரோடு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதுகுறித்து, பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிா்மல்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா். இதில் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயத்தின் முக்கிய உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.