மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சிதம்பரம் அருகே விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த வெற்றிச்செல்வன் (37)

Published On :28 அக்டோபர் 2026, 3:48 am IST

சிதம்பரம் அருகே விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன் (37). இவா் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவாயம் அருகே கடந்த 24- ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் சென்ற போது மினிலாரி மோதி விபத்துக்குள்ளாகி படுகாயத்துடன் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் வெற்றிச்செல்வன் மூளைசாவு அடைந்ததாக தெரிவித்தனா். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகள் அம்மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. பின்னா் அவரது உடல் புதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஓப்படைக்கப்பட்டது. உடல் உறுப்புகள் தானமாக வழங்கியதால் சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொறுப்பு) எஸ்.தனலட்சுமி, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் பாலமுருகன், காவல்ஆய்வாளா் பாபு

உதவி ஆய்வாளா் டைமன்துரை மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று வெற்றிச்செல்வன் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.