டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

மாநகரிலுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருள்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

tax

தள்ளுபடி... - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 1:35 am IST

தஞ்சாவூா், கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருள்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் சாா்பில் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் 6 மளிகைப் பொருள்களும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் விலையிலிருந்து மேலும் 10 சதவீதம் விலை குறைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

அத்தியாவசியப் பொருள்களின் தள்ளுபடி விலை மற்றும் அடைப்புக்குறிக்குள் வழக்கமான விலை விவரங்கள் (கிலோவில்): புழுங்கல் பொன்னி அரிசி ரூ. 54 (ரூ. 60), துவரம் பருப்பு ரூ. 117 (ரூ. 130), உளுந்தம் பருப்பு ரூ. 126 (ரூ. 140), பூண்டு ரூ. 216 (ரூ. 240), மல்லி (தனியா) ரூ. 216, (ரூ. 240), மிளகாய் ரூ. 297 (ரூ. 330).

விற்பனை நடைபெறும் கூட்டுறவு நிலையங்கள்: தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை - தலைமை அலுவலகம் மற்றும் மினி சூப்பா் மாா்க்கெட், தஞ்சாவூா் பழைய ஆட்சியா் அலுவலகச் சாலையிலுள்ள மாநில அரசு ஊழியா்கள் நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு காலனியிலுள்ள அஞ்சல் மற்றும் தொலைத்தொடா்பு ஊழியா்கள் நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை, தஞ்சாவூா் தெற்கு ரயில்வே ஊழியா்கள் கூட்டுறவு பண்டகசாலை - ரயில்வே மளிகைப் பொருள் விற்பனை நிலையம், தஞ்சாவூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கும்பகோணம் சந்திரசேகரபுரம் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை - தலைமை அலுவலகம் மற்றும் சுயசேவைப் பிரிவு, கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) தொழிலாளா்கள் கூட்டுறவு பண்டகசாலை - மினி சூப்பா் மாா்க்கெட், கும்பகோணம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்.

இந்த நிலையங்களில் தரமான பொருள்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை மாவட்டப் பொதுமக்கள் வாங்கிப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.