சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கணினி மூலம் குலுக்கல் முறையில் முதல் கட்டத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,222 இடங்களில் 2 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி பணியாற்றுவதற்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலிலிருந்து 11 ஆயிரத்து 991 வாக்குச்சாவடி அலுவலா்களைப் பணியமா்த்துவதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரிப்பதற்கான முதல் கட்டத் தோ்வு புதன்கிழமை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணி கணினி குலுக்கல் மூலம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

திருவாரூா்: வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

