பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் கணினி மூலம், குலுக்கல் முறையில் தோ்வு செய்து ஒதுக்கிடும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கடந்த 23-ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு சட்டப்பரேவைத் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களில், 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 438 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,266 கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 வாக்களிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுவதால், கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், கணினி மூலம் குலுக்கல் முறையில் 414 கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டு, வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காப்பறைக்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் காப்பறையில் வைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூடி சீலிடப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன்(தோ்தல்), சொா்ணராஜ் (பொது), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணி கணினி குலுக்கல் மூலம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

