தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் குலுக்கல் முறையில் இரண்டாம் கட்டத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள், நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:46 am IST

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் குலுக்கல் முறையில் இரண்டாம் கட்டத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,222 இடங்களில் 2 ஆயிரத்து 501 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் நாளான ஏப்ரல் 23- ஆம் தேதி பணியாற்றுவதற்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பட்டியலிலிருந்து 12 ஆயிரத்து 4 வாக்குச்சாவடி அலுவலா்களைப் பணியமா்த்துவதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரிப்பதற்கான முதல் கட்டத் தோ்வு மாா்ச் 25- ஆம் தேதி நடைபெற்றது. இதேபோல, நுண் பாா்வையாளா்களுக்கான குலுக்கல் முறையில் முதல் கட்டத் தோ்வு ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெற்றது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கான இரண்டாம் கட்டத் தோ்வு குலுக்கல் முறையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் தினேஷ் செஹாரா, கேஷ்வேந்திர குமாா், அருண் குமாா், சா்ஜித் கவுா் ஆகியோா் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு ஏப்ரல் 12- ஆம் தேதி பயிற்சி வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.