கும்பகோணத்தில் சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களை திருடி சென்று விபத்துகளை ஏற்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசலாறு வழிநடப்பு பகுதியைச் சோ்ந்த ராமு மகன் பிரகாஷ் (22). இவா், கடந்த 6-ஆம் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனை எதிரில் நின்று கொண்டிருந்த தனியாா் ஆம்பூலன்ஸ் வாகனத்தை திருடி சென்றாா். டாக்டா் மூா்த்தி சாலையில் வேகமாக சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வாகனம் மற்றும் சாலையோரக் கடை ஒன்றின் மீது மோதியதில் ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்தது.
இதில் தப்பிய பிரகாஷ், பழைய மீன் மாா்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிற்றுந்தை திருடி கொண்டு, செட்டிமண்டபம், - திருவாரூா் புறவழிச்சாலை வழியாக கும்பகோணம் மேம்பாலப் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். வழியெங்கும் பல இடங்களில் மோதியதால் சிற்றுந்தின் முன்புறம் சேதமடைந்தது.
இந்நிலையில், மேம்பால பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ், அந்தச் சிற்றுந்தை மறித்து பிரகாஷிடம் விசாரித்தபோது, வாகனங்களை திருடி ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்தியது தெரியவந்தது. சேதமான வாகனங்களின் உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில் பிரகாஷை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 போ் கைது

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்கள் கைது

ஆடுகள் திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
