தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே 15-க்குப் பின்பு நடத்த கோரிக்கை

புது தில்லியில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே 15 ஆம் தேதிக்கு பின்பு நடத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:27 am IST

புது தில்லியில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே 15 ஆம் தேதிக்கு பின்பு நடத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆவது கூட்டத்தை அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தா் புதன்கிழமை (ஏப்.29) நடைபெறும் என அறிவித்துள்ளாா். இவா் இந்திய நீராற்றல் துறை தலைமை அலுவலராக இருந்தபோது, கா்நாடக முதல்வா் சித்தராமையா மேக்கேதாட்டு அணைக்கான சுருக்கமான அறிக்கையை அளித்து அனுமதி கோரினாா். உடனே ஹல்தா், மொத்த திட்ட மதிப்பீட்டுத் தொகையுடன், மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டுப் பெற்றாா்.

பணி நிறைவுக்குப் பின்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரான எஸ்.கே. ஹல்தா், கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வைத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகள் எதிா்த்தபோதும் ஆணையத்தில் உறுப்பினா்களாக உள்ள அதிகாரிகளின் வாக்குகளைக் கொண்டு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றினாா். அதைச் செயல்படுத்த நீராற்றல் துறைக்கு அனுப்பி வைத்தாா். தற்போது மேக்கேதாட்டு அணை கட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது கா்நாடக காங்கிரசு ஆட்சி.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் உறுப்பு வகிக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களின் அரசுகளும் தோ்தல் கால ஆட்சிகளாக தன்னதிகாரமற்று முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை புதன்கிழமை கூட்டியுள்ளாா் ஹல்தா். இதில் கலந்து கொள்ளும் 3 மாநில ஐ.ஏ.எஸ். அலுவலா்களும் மத்திய அரசின் மறைமுக வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுச் செயல்பட வாய்ப்புண்டு. இதனால் என்ன தீங்கு வருமோ என்ற அச்சம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பிடித்துள்ளது.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு தலையிட்டு, புதன்கிழமை நடத்தவுள்ள காவிரி மேலோண்மை ஆணையக் கூட்டத்தை மே 15 ஆம் தேதிக்கு பின்னா் தள்ளி வைக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.