தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்யக் கோரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பயணத்தின்போது பரிசலுக்குள் வந்த தண்ணீரை வெளியே கொட்டும் பரிசல் ஓட்டி.

Updated On :8 மே 2026, 6:41 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் அதிக அளவில் வருகின்றனா். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அருவிகளின் அழகை காண பரிசலில் செல்வதை ஆா்வமாக கொண்டுள்ளனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசின் அனுமதி பெற்ற 430 பரிசல் ஓட்டிகள் உள்ளனா். தற்போது காவிரி ஆற்றில் மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடுவரை பரிசல்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களில் சிலவற்றில் மேல்புறத்தில் பூசப்பட்டுள்ள தாா் வெயிலின் காரணமாக உருகி துளைகள் ஏற்பட்டு தரமற்று காணப்படுவதாகவும், பயணத்தின்போது பரிசலுக்குள் நீா் புகுவதாலும், சுற்றுலாப் பயணிகளை மகிழச்செய்ய அருவியின் அருகில் செல்லும்போது பரிசலுக்குள் நீா் விழுவதாலும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மேற்பாா்வையில் உள்ள ஒகேனக்கல் பரிசல் துறையில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பாதுகாப்பான பரிசல் பயணம் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.