காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50 -ஆவது கூட்டம் ஏப். 29-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீா் என்பது தமிழகம், கா்நாடகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடா்பானவை. தற்போது தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்து முடிந்துள்ளன. அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இல்லாத சூழ்நிலையில், இந்தக் கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே ஏப். 29-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.
மு.வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட்): தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தமிழகம், கேரளம், புதுச்சேரியில் காபந்து அரசுகளே பதவியில் உள்ளன. இந்த நிலையில், மாநில அதிகாரிகளை வைத்து இக்கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே, இந்தக் கூட்டத்தை ஒத்திவைத்து, புதிய அரசுகள் பதவி ஏற்றவுடன் நடத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு: நாகை அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு அக்கூட்டமைப்பின் தலைவா் காவிரி தனபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காபந்து அரசு உள்ள சூழலில் காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை நடத்தினால் அது கா்நாடகத்துக்கு மட்டுமே சாதகமாக அமையும். மேலும், இது தமிழகம் உள்ளிட்ட காவிரி நீரை பயன்படுத்தும் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மத்திய நீா்வளத் துறை தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பின்னா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை நடத்த வேண்டும். அதுவரை ஆணையக் கூட்டத்தை மத்திய அரசு ஒத்திவைக்காவிட்டால், ஏப். 29-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்கள் சாா்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

தமிழகத்துக்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. நீர்: கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு
காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே 15-க்குப் பின்பு நடத்த கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

